பயங்கரவாதத்திற்கு எதிராகக் கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக் கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காகத் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
எந்த வடிவில் பயங்கரவாதம் வந்தாலும் அதனை சகித்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கக் கூடாது என்றும், அதற்குக் கண்துடைப்பு நடவடிக்கை கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் மையங்களை இந்தியா வரவேற்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
















