ராமநாதபுரத்தில் அரசு விடுதியில் பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டார்.
இது தொடர்பான காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் தாக்குதல் நடத்திய 3 மாணவர்கள் மற்றும் விடுதி காப்பாளர் உட்பட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
















