சென்னை பாரிமுனை அருகே ரவுடி கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி ஜீவா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த லோகேஷ், யுவராஜ், லட்சுமணன் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகி விட்டு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, பாரிமுனை சிக்னல் அருகே அவர்களை பின் தொடர்ந்து வந்த கும்பல், லட்சுமணன், யுவராஜ் உள்ளிட்டோரை கத்தியால் தாக்கியது.
இதனையடுத்து இரண்டு கும்பலும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
















