தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க இந்திய பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில பார் கவுன்சில்களுக்கு 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது 4 கட்டங்களாகப் பார் கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, தெலங்கானா, உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 28ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோல் தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















