கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி ஆணையர் கொடுத்த பணிச்சுமையால் அலுவலக உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழித்துறை நகராட்சி அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் ஆனந்த். இவருக்குக் கடந்த சில நாட்களாக ஆணையாளர் சவீதாஸ்ரீ அதிக பணி கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
















