ஹரியானா மாநில ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாபர் அகமது சித்திக் மீது அமலாக்கத்துறையினர் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில், கைதான பயங்கரவாதிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த நிலையில், ஜாபர் அகமது சித்திக் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
என்ஏஏசி அங்கீகாரம் பெற்றதாக இந்தப் பல்கலைக்கழகம் போலியாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
















