சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மதுபானக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள அட்டைகளை ஒப்படைப்பதாகக் கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மதுபான கடை திறக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பிரதான சாலையில், மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், தங்கள் அடையாள அட்டைகளை ஒப்படைப்பதாகக் கூறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.
இதையடுத்து பொதுமக்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
















