சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
நடை திறக்கப்பட்டது முதலே கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து கோயிலில் பக்தர்களின் கூட்டம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி, கோழிக்கோட்டை சேர்ந்த பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். கூட்ட நெரிசலை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















