பெரம்பலூர் மாவட்டத்தில் நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களைத் திண்டிவனத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் தமிழரசன் என்பவரது நகைக்கடையில் கடந்த 13ம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் காவலாளியை கட்டிப்போட்டு நகைகளைத் திருட முயன்றது.
அப்போது கடையில் அபாய ஒலி எழுந்ததால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் திண்டிவனம் பேருந்துநிலையம் முன்பு 4 பேரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















