நெல்லை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை கிடைக்காமல் தனது தாய் உயிரிழந்தததாக மகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்காளி என்ற பெண், வயிற்று வலி காரணமாக மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு அவருக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது மகள், வார்டு வார்டாகச் சென்று மருத்துவர்களை தேடி உள்ளார். எனினும் அங்கு யாரும் இல்லையெனக் கூறப்படுகிறது. இதனால் சிகிச்சை கிடைக்காமல் ஊர்காளி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
வேதனை அடைந்த அவரது மகள், மருத்துவமனை நிர்வாகத்தைக் குற்றம்சாட்டி அழுது கொண்டிருந்தார்.
இதனை அங்கிருந்த மற்றொரு நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இதனிடையே வீடியோவை நீக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவதாகத் தமிழ்ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.
















