மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரசாதங்களின் விலை உயர்ந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காகச் சர்க்கரை பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் திடீரெனப் பிரசாங்களின் விலை உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
175 கிராம் சர்க்கரை பொங்கல் பதினைந்து ரூபாய்க்கும், 150 கிராம் புளியோதரை, 40 கிராம் வடை தலா 15 ரூபாயும், 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு ஆகியவை 15 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக 10 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாங்கள், மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















