பீகாரில் புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ் குமார் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற தலைவராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் விழாவில் 10 ஆவது முறையாக நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இதேபோல் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
















