திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 11 பேர் கதவுகளை உடைத்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தப்பிக்க முயன்ற 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து 11 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 11 பேரையும் டிசம்பர் 3ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து 11 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
















