சென்னையில் தொழிலபதிர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
சென்னையில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிர்மல்குமார், சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் கலைச்செல்வனின் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
விடிய, விடிய நடைபெற்ற சோதனை அதிகாலை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கண்ட நிறுவனங்கள், சிப்காட் மற்றும் நெடுஞ்சாலை பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தியதில், போலி நில ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரில், சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
















