பெங்களூரு விதான் சவுதா முன்பு இளைஞரை தாக்கி மர்ம நபர்கள் பணம், செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான் சவுதா எதிரே கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளதால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு விதான் சவுதா பகுதியில் உள்ள அலங்கார விளக்குகளை பவன் என்ற இளைஞர் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 நபர்கள், பவனை தாக்கி 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதே போன்று, விதான் சவுதா சாலையில் சென்று கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த 40 இளைஞர்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விதான் சவுதா முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















