மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்
Sep 12, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மசோதா மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வரம்பு நிர்ணயித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புகுறித்து 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்.

குடியரசு தலைவரின் கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவித்தார்.

அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது.

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுத் தீர்ப்பு அளித்தது.

அதில், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன என்றும், ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம், ஆனால் நான்காவது வாய்ப்பு கிடையாது எனவும் தெரிவித்தனர்.

ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது என்றும், அதே நேரத்தில் நீண்ட காலம் மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்துக்களை கேட்கத் தேவையில்லை எனக்கூறிய நீதிபதிகள், வேண்டுமென்றால் மசோதா மீது நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

Tags: supreme court of indiaகுடியரசுத்  தலைவர்உச்ச நீதிமன்றம்Supreme Court cannot set a deadline for the President and Governors to decide on the billஆளுநர்
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

பெங்களூரு விதான் சவுதா முன்பு இளைஞரை தாக்கி, பணம், செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies