ராமேஸ்வரத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் பள்ளி மாணவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேரன் கோட்டை பகுதியில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முனியராஜை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு முனியராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, முனியராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, முனியராஜ் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
















