ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற “யோக நரசிம்மர்” கோயிலுக்குத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 பேட்டரி கார்கள் வழங்கப்பட்டன.
முன்னதாகக் கார்த்திகை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், மூலவர் யோக நரசிம்மருக்கு மேல்சாத்து வஸ்திரம் சாத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















