திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இடத்தை விற்றதற்கு கமிஷன் தராத நபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது நிலத்தை விற்பனை செய்துள்ளார். அதற்காகக் கமிஷன் தர வேண்டும் என்று கூறி யுவராஜ் என்பவர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவுடிகள் சிலர் பாண்டியனை ஓட ஓட விரட்டிப் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
















