இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதி திரட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு அதன் தொடர்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து நிதி திரட்டி வருகிறது. பாகிஸ்தானின் செயலியான சடாபே மூலம் டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதற்காக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முஜாஹித் எனப்படும் போராளிகளுக்கு நிதி திரட்டுகிறது.
குளிர்கால உடைகள், காலணிகள், மெத்தை, கூடாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க தலா ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 400 ரூபாய் என நிதி திரட்டப்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
















