சென்னை கானத்தூரில் பழைய பொருட்களைச் சேகரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது.
கானத்தூரில் உள்ள மாயாஜால் திரையரங்க வளாகத்தில் பழைய பொருட்களைச் சேகரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வந்தது.
இந்நிலையில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவின் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
















