ஹரியானாவை சேர்ந்த 80 வயது முதியவர் 15 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவ் செய்து அசத்தி உள்ளார்.
சாதிப்பதற்கு வயது என்பது ஒரு தடையில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் ஹரியானாவை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் ஸ்கை டைவ் செய்து அசத்தி உள்ளார்.
அங்கித் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சமற்ற தாத்தா என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 80 வயதுள்ள முதியவர் ஒருவர் விமானத்தின் மூலம் 15 ஆயிரம் அடி உயரத்திற்கு வானில் பறந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய காட்சிகள் உள்ளன.
15 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்த முதியவரின் வீடியோ 5 லட்சத்து 80 ஆயிரம் பார்வைகளை கடந்துள்ள நிலையில் பலரும் இன்ஸ்டாகிராமில் அவரை பாராட்டித் தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
















