ஈக்வடாரில் தாரில் சிக்கி உயிருக்குப் போராடிய நாயை அவ்வழியாகச் சென்றவர்கள் பத்திரமாக மீட்டது பலரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
ஈக்வடாரின் தலைநகர் குயிட்டோவில் தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
இதனால் லாரியில் இருந்த அடர்த்தியான தார், சாலையில் பரவிக் கிடந்தது. சாலையில் தார் கொட்டிக் கிடப்பதை இருப்பதை அறியாமல் அவ்வழியாக வந்த நாய் ஒன்று அதில் சிக்கிக் கொண்டது.
நீண்ட நேரமாக தாரில் இருந்து வெளியேற முடியாமல் அந்த நாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாகச் சென்ற சிலர் உயிருக்கு போராடிய நாயை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், நாயை மீட்டவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
















