பீகார் மாநில முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பீகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டப்பேரவை கட்சி தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து பாட்னாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், பீகார் மாநில முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஜேடியூவைச் சார்ந்த 8 பேரும், பாஜகவை சேர்ந்த 14 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் கூட்டாகப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்கா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
















