உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்புமீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போதும் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் சரமாரியான தாக்குதலை நடத்துகின்றன.
அந்த வகையில், உக்ரைனின் மேற்கு நகரமான டெர்னோபில் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 3 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.
















