ஜப்பானின் கடல் உணவுகளுக்குச் சீனா தடை விதித்துள்ளது. தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களைப் பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கியும் சீனா அச்சுறுத்தி வருகிறது.
எனவே, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி எச்சரித்தார்.
இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது. இந்தச் சூழலில், ஜப்பானின் கடல் உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
















