நீலகிரிக்கு வரும் வெளி மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்களை, உள்ளூர் கார் ஓட்டுநர்கள் தடுப்பதாகக் கூறி, கோவையை சேர்ந்த கார் ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் நேற்று தாக்கப்பட்டதை கண்டித்து, கல்லார் சோதனைச் சாவடியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீலகிரியில் இருந்து கோவை நோக்கி வரும் வாடகை கார்களை சிறைப்பிடித்த அவர்கள், கார் ஓட்டுநர் தங்கவேலை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
















