திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு பேருந்தின் குறுக்கே வந்து விபத்தில் சிக்கிய பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொடைக்கானல் ஏழு ரோடு சந்திப்பில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம், திடீரென அரசு பேருந்தின் குறுக்கே வந்து விபத்தில் சிக்கியது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்கும் முயற்சியின்போது, அவரது பணப்பை மற்றும் செல்போன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















