டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த மேலும் 4 மருத்துவர்களை என்ஐஏ கைது செய்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
இவ்வழக்கில், காரின் உரிமையாளர் மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த நபர் என 2 பேரை ஏற்கெனவே கைது செய்து என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக மேலும் 4 மருத்துவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதன் படி, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 3 பேர், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















