மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவம்பவர் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை அடையாறில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லை சத்யா, தனது புதிய கட்சியின் பெயரான திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்தார்.
அப்போது, மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் ‘திராவிட வெற்றிக் கழகம்’ கட்சியில் இணைந்தனர்.
















