எஸ்.ஐ.ஆர். தொடர்பான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தமிழக பாஜக சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்ஐஆர் தொடர்பாக வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தமிழக பாஜக சார்பில் ஒவ்வொரு சட்டமன்றத்திலும் பிஎல்ஏ 1 குழு மற்றும் ஒவ்வொரு பூத் அளவிலும் பி எல் ஏ 2 குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த ஒரு வாக்காளருக்கேனும் sir படிவம் வரவில்லை என்றாலோ பூர்த்தி செய்ய தெரியவில்லை என்றாலோ பூர்த்தி செய்த படிவத்தை திரும்பப் பெற யாரும் வரவில்லை என்றாலோ சிரமத்தை தவிர்க்க பாஜக சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
92402 64000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசினாலோ அல்லது மிஸ்டு கால் கொடுத்தாலோ பாஜக தொண்டர்கள் நேரில் வந்து உதவி செய்வார்கள் எனவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்,
















