மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதற்கு சமூகத்தின் பொறுப்பு மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.
அழிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களே ஆகும் என்றும், ஆனால் கட்டமைப்புக்கு, பல ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
பொறுமை, கட்டுப்பாடு மற்றும் கூட்டு முயற்சி மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும், தீர்வுக்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மணிப்பூரில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன மோதலைத் தணிக்கவும், சமூகங்களுக்கிடையே ஸ்திரத்தன்மையை மீண்டும் கொண்டு வரவும் சமூக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோகன் பகவத் கூறினார்.
















