அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இன்றுடன் அவரது பணி நிறைவு பெறுகிறது.
டில்லியில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய் பங்கேற்றார். அப்போது , தான் பவுத்த மதத்தை பின்பற்றுவதாகவும், ஆனால் மதச்சார்பற்ற மனிதன் என கூறினார்.
இந்து, பவுத்தம், சீக்கியம், முஸ்லிம், கிறிஸ்துவம் உள்பட அனைத்து மதங்களையும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தால்தான் இந்த நிலையை அடைந்தேன் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்ன செய்ய முடிந்ததோ அதை செய்ததாகவும் கூறினார்.
















