தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி முதல் வண்டலூர் வரையிலான சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கைகளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
















