மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள், கணினி ஆபரேட்டர்கள் எஸ்ஐஆர் பணிகளில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு பங்களிக்காத அலுவலர்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் வாட்ஸ் ஆப் மூலம் ஆடியோ மூலம் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆடியோவில் மிரட்டும் தொனியில் பேசிய சார் ஆட்சியரைக் கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
















