திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வினிஷ்கா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரும் பள்ளி படிக்கும்போதே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டில் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால், காதலை கைவிட்ட வினிஷ்காவுக்கு மாதேஷ் காதல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால், மன உளைச்சல் ஆளான வினிஷ்கா கடந்த 15ஆம் தேதி எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடந்த 5 நாட்களாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வினிஷ்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
















