திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதலித்த பெண்ணின் தந்தை காலணியால் அடித்ததாக, இளைஞர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாம்பட்டியைச் சேர்ந்த ராஜதுரையும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணும் கடந்த சில நாட்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த பெண்ணின் தந்தை ராஜதுரையை காலணியால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜதுரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















