கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தவெக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினருடன் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாக்காளர் பதிவு அலுவலர் கீதா ராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் அத்து மீறிப் புகுந்த தவெக தொண்டர்கள் தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
















