கொடைக்கானலில் மேல் மலை கிராமங்களுக்குச் செல்லும் பிரதான மலை சாலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகப் பகல் வேளைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், மேல் மலை கிராமங்களுக்குச் செல்லும் பிரதான மலை சாலையில் பனி மூட்டம் காணப்பட்டது.
மன்னவனூர் கிராமம் முதல் பூம்பாறை வரையிலும், அதே போலக் கொடைக்கானல் நகர் பகுதியிலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் பனி மூட்டம் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இதனிடையே சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, சாலையில் நடனமாடி உற்சாகம் அடைந்தனர்.
















