காஞ்சிபுரத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் திமுகவிரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
















