திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சாலையைக் காட்டெருமைகள் மறித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து வாகனங்களை மறித்து நின்ற காட்டெருமைகளை வனத்துறையினர் விரட்டினர்.
கொடைக்கானலில் சமீபகாலமாக வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தொடர் கதையாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, வனவிலங்குகளைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















