விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கீழ அழகிய நல்லூரில் இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
கீழ அழகிய நல்லூரில் இரண்டு சமூகத்தை சேர்ந்த மக்களும் சுமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒருவர் வீட்டில் நடந்த சுப நிகழ்வில், பட்டாசு வெடித்தபோது, அது மற்றொரு சமுகத்தை சேர்ந்த மாணவி மீது பட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இது தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால், தற்போது மற்றொரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
















