திருப்பூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கத்தியும், கம்புமாகச் சுற்றித்திரிந்த மாணவர்களால் பதற்றமான சூழல் நிலவியது.
திருப்பூரின் அங்கேரிபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இருதரப்பு மாணவர்களுக்கிடையே சில காரணங்களுக்காகப் பகை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகப் பள்ளி முடிந்ததும், ஒன்று திரண்ட மாணவர்கள், இரண்டு தரப்பாகப் பிரிந்து சண்டைக்குத் தயாராகினர்.
இதனைத் தற்செயலாகப் பார்த்த ரோந்து காவலர்கள், மாணவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர். பிறகு, அப்பகுதி முழுவதும் அலைந்து திரிந்த காவலர்கள், மாணவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்ததுடன், தவறுதலாக எந்தச் சம்பவமும் நடக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், இந்த மாணவர்களுக்குரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
















