ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஏஐ கண்காட்சிக்கு வருகை தந்த அதிபர் புதினை மனித வடிவ ரோபோ நடனமாடி வரவேற்ற காட்சி வைரலாகி உள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க், தனது நிறுவனத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மாஸ்கோவில் ஏஐ கண்காட்சியை நடத்தியது.
இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக ஏஐ மாநாட்டிற்கு வருகை தந்த அதிபர் புதினை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரீன் எனப் பெயரிடப்பட்ட மனித வடிவ ரோபோ ஒன்று வரவேற்றது.
பின்னர் அந்த ரோபோ நடனமாடியதை அதிபர் புதின் கண்டு களித்தார். மேலும் மனிதவடிவ ரோபோவின் அசைவுகளை கண்டு அதன் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்குறித்து விஞ்ஞானிகளிடம் புதின் கேட்டறிந்தார். மனித வடிவ ரோபோ நடனமாடி வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















