நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பூரண குணமடைந்தது.
நெல்லையை சேர்ந்த கார்த்திக் என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை, கடும் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
பரிசோதனையில் குழந்தைக்கு நிமோனியா மற்றும் நுரையீரலில் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ நிபுணர்களின் தொடர் சிகிச்சையால் குழந்தை பூரண குணமடைந்து வீடு திரும்பியது.
















