திருவண்ணாமலை அருகே யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்த உரக்கடைக்கு வேளாண் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேல் செங்கம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட யூரியா மூட்டைகளை தனியார் உரக்கடை உரிமையாளர் பதுக்கி வைத்திருப்பதாக விவசாயிகள் புகாரளித்தனர்.
அதனடிப்படையில் அந்தக் குடோனில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்து, அதன் உரிமையாளருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
















