லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியம் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் வெஸ் ஆண்டர்சனின் சினிமா பாணியைக் கொண்ட பிரம்மாண்ட கண்காட்சியைத் தொடங்கி உள்ளது.
Bottle Rocket, The Royal Tenenbaums, Fantastic Mr. Fox, The Grand Budapest Hotel, போன்ற பல்வேறு படங்கள்மூலம் பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த வெஸ் ஆண்டர்சன். திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டுள்ள வெஸ் ஆண்டர்சன் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது தனித்துவமான திறமையால் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் வெஸ் ஆண்டர்சனின் திரை பயணத்தில் பயன்படுத்தி 700க்கும் மேற்பட்ட பொருட்களை லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி உள்ளது.
இதில் ரால்ப் ஃபியன்னெஸ் மற்றும் டில்டா ஸ்விண்டன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் அணிந்த அசல் உடைகள், The Life Aquatic with Steve Zissou, Asteroid City போன்ற பிரபல படங்களில் அரிய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை ஆண்டர்சனின் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
















