திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து பட்டாபிராம் செல்லக்கூடிய பேருந்து ஒரு மணி நேரமாக வராததால் பயணிகள் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பட்டாபிராமிற்கு நாள்தோறும் 54 C என்ற பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல ஏராளமானேர் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்து வராததால் பாரிவாக்கம், கோலப்பன்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பயணிகள் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, பெண்கள் உட்பட ஏராளமானோர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளை மறித்துச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
















