கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இயங்கி வரும் காலணி தொழிற்சாலையில், ஆள்சேர்ப்பு முகாமிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில், தற்போது 52 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தொழிற்சாலையின் முன்பு குவிந்தனர்.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















