ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிங்காரக்கோட்டை அருகே அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவுக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. நூற்பாலை நிர்வாகமானது ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில், கோவையை சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் 4 பேர், சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் சிங்காரக்கோட்டை அருகே அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவிற்கு சொந்தமான நூற்பாலையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வீட்டின் முன் குவிந்த திமுகவினர், அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் இடையூறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுகவினர் அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசியதால் பதற்றம் நிலவியது.
















